தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு; ரவுடி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு! - விருதுநகரில் வழக்கறிஞரை வெட்டிய ரவுடி

விருதுநகர்: நரிக்குடி அருகே  வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடி லட்சுமணன் மற்றும் அவரது கூட்டாளிகளைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

lawyer attack in virudhunagar

By

Published : Oct 29, 2019, 11:40 AM IST

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் கிராமத்தில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தங்கபாண்டியன். இவர் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணி செய்துவந்தார்.

இந்நிலையில், வீரசோழனில் உள்ள தனது வீட்டிலிருந்து கடைவீதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது டாஸ்மாக் பார் அருகே மறைந்திருந்த லட்சுமணன் என்ற ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்

பின்னர், அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், வழக்கறிஞர் தங்கபாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வழக்கறிஞரை வெட்டிய ரவுடி லட்சுமணன், அவரது கூட்டாளிகளைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

கண்களைக் கட்டிக்கொண்டு 25 வித்தியாசமான செயல்கள்... சாதித்த பள்ளி மாணவி!

ABOUT THE AUTHOR

...view details