செப்டம்பர் 20ஆம் தேதியன்று விருதுநகரில் 'மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு' என்று பிரசாரத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் மீது விருதுநகர் மேற்கு காவல் நிலைய காவலர்கள் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
சட்டக் கல்லூரி மாணவி நந்தினி நீதிமன்றத்தில் ஆஜர்
விருதுநகர்: தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கூறி போராடிய சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அவர் தந்தையுடன் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
nandhini
இந்த வழக்கு விசாரணை இன்று விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண் ஒன்றில் நீதித்துறை நடுவர் மருதுபாண்டி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி மருதுபாண்டி, இருவரையும் நவம்பர் 4ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: ரவிதாஸ் கோயில் இடிப்பு வழக்குக்கு தீர்வு காண உச்ச நீதிமன்றம் அறிவுரை!