விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் முருகேசனின் மனைவி பாண்டீஸ்வரி (21). கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாண்டீஸ்வரி தலைப் பிரசவத்திற்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரசவத்தின்போது உயிரிழந்த தாய்-சேய்: உறவினர்கள் ஆர்ப்பாட்டம் - சாத்தூர் அரசு மருத்துவமனையில் தாய் சேய் உயிரிழப்பு
விருதுநகர் : பிரசவத்தின்போது தாயும், சேயும் உயிரிழந்த சம்பவத்திற்கு, மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக் குற்றஞ்சாட்டி அப்பெண்ணின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாய்-சேய் உயிரிழப்பை கண்டித்து உறவினர்கள் ஆர்பாட்டம்
பிரசவத்தின்போது பெண் குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே அவருக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து குழந்தையும் உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், சரியாகப் பிரசவம் பார்க்காத அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்களைக் கைது செய்யக் கோரி அப்பெண்ணின் உறவினர்கள் சுமார் 50 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.