தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருள் பறிமுதல் - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

kutka seized in virudhunagar
kutka seized in virudhunagar

By

Published : Aug 24, 2020, 2:20 AM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் ஆய்வாளர் தலைமையில் நடத்திய சோதனையில் பெத்தம்மாள் நகரில் வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருந்த முத்துராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் 25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details