விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கொண்டு வரும் கரோனா பரவல் தடுப்பு பணி குறித்து சுகாதாரத் துறை அலுவலர்களுடன் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பே மிக முக்கியம். முகக்கவசம் அணியாமல், அத்தியாவசியம் இன்றி வெளியே வருகின்றனர். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்போது மனது கஷ்டமாகதான் இருக்கிறது. ஆனால், பரவலை தடுக்க வேறு வழி இல்லை.
முதல் அலையின் பாதிப்பில் ஆக்ஸிஜன் தேவை இல்லாமல் இருந்தது. தற்போது நிலைமை அப்படி இல்லை. பொதுமக்கள் அதனை உணர்ந்து செயல்பட வேண்டும். நோயின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்.