தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மேலெலும் கீழடி' - ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு - KIZHADI documentry screening in Chatur

விருதுநகர்: தனியார் கல்லூரியில் 'மேலெழும் கீழடி' எனும் தலைப்பில் கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சாத்தூரில் கீழடி ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு
சாத்தூரில் கீழடி ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு

By

Published : Jan 28, 2020, 10:30 AM IST

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றைக் கூறும் கீழடியில் நான்கு கட்டங்கள் அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்து ஐந்தாம் கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனிடையே விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த ஆவணப்படம் வெளியீட்டு விழாவும் கண்காட்சியும் நடைபெற்றன.

சாத்தூர் தனியார் ‌கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் கணேஷ்ராம் தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளைத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தமுஎச மாநில துணைச் செயலாளர் நாறும்பூ நாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கீழடி பற்றி விரிவாகச் சிறப்புரையாற்றினார்.

சாத்தூரில் கீழடி ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு

பின்னர் 'மேலெழும் கீழடி' என்ற ஆவணப்படத்திற்கான குறுந்தகடை கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைவர் மருத்துவர் அறம் வெளியிட்டார். கல்லூரியின் அரங்கில் கீழடி அகழ்வாராய்சி குறித்த கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை தமுஎச நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.


இதையும் படிங்க:

தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்வரை ஓயமாட்டேன் - பெ மணியரசன்

ABOUT THE AUTHOR

...view details