விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வேண்டுராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிமுருகன். இவரின் தந்தை கந்தையா, குடும்ப பிரச்னை காரணமாக பூர்வீகச் சொத்துகள் அனைத்தையும் தனது மகள் லட்சுமியின் பெயரில் எழுதி வைத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 22ஆம் தேதி மல்லி காவல் நிலையத்தில் ஜோதிமுருகன்புகார் அளித்தார்.
காவல் நிலையம் முன்பு தற்கொலை முயற்சி: நபருக்கு தீவிர சிகிச்சை - காவல்நிலையம் முன்பு மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிப்பு
விருதுநகர்: சொத்து விவகாரத்தால் காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்ததால் நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
police-station
காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று மல்லி காவல் நிலையம் வந்த ஜோதி முருகன் தான் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ வேகமாக அவரது உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் தீயை அனைத்து படுகாயமடைந்த ஜோதிமணியை சிவகாசி அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க:டெல்லி வன்முறை: 20 பேர் காயம், தலைமைக் காவலர் உயிரிழப்பு!