தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதியோருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய நீதிபதிகள்! - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர் : கரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் வாழ்வாதாரம் இழந்த முதியோருக்கு, அத்தியாவசியப் பொருள்கள் அடங்கியத் தொகுப்பை நீதிபதிகள் இருவர் வழங்கினர்.

Judges provided essential items for the elderly!
Judges provided essential items for the elderly!

By

Published : Jun 16, 2020, 4:56 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியும் சட்ட பணிக் குழு தலைவருமான வெற்றிமணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி வானதி ஆகியோர் சேத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட முதியோருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கினர்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய நீதிபதிகள், நம்முடைய முன்னோர்கள் காலத்தில் காலரா, பெரியம்மை நோய் பரவியபோது எவ்வாறு தனிமைப்படுத்தி கண்காணித்து தொற்று நோயில் இருந்து பாதுகாக்கப்பட்டதோ அதை போல் தற்போதும் தனிமைப்படுத்தி முகக் கவசம் அணிந்து மஞ்சள் நீர், கிருமி நாசினி தெளித்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சேத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் குமார், சார்பு ஆய்வாளர் காளிராஜ் செய்திருந்தனர். விழாவில் ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாக சங்கர், தளவாய்புரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details