விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் வேலுமணி (58), திருமங்கலம் அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர், இன்று காலை விருதுநகர் அருப்புக்கோட்டை சாலை மேம்பாலம் அருகே கருமாதிமடம் பேருந்து நிறுத்தத்திற்கு பேருந்தில் ஏறுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
விருதுநகரில் ஆசிரியையிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு! - Theft near arupukottai bridge
விருதுநகர்: பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்ற ஆசிரியையிடம், பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 5 புவன் தங்க செயினை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ob
அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் 5 பவுன் தாலி செயினை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து வேலுமணி உடனடியாக பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பி சென்ற குற்றவாளிகளை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் நகை பறிப்பு: வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!