தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சினிமா பட பாணியில் நடந்த சேஷிங்: மணல் திருடிய ஜேசிபி ஓட்டுநர் கைது - வருவாய்த்துறையினர் அதிரடி சோதனை

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளிய ஜேசிபி ஓட்டுநரை வருவாய்த் துறையினர் சினிமா பட பாணியில் விரட்டி பிடித்தனர்.

arrest
arrest

By

Published : Sep 5, 2020, 3:40 PM IST

விருதுநகர் மாவட்டம் அச்சம்குளம் கிராமத்தில் உள்ள கடம்பன்குளம் கண்மாய் பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக, சார் ஆட்சியர் தினேஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவின்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் சரவணன் தலைமையில் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கண்மாய் பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய நபர்கள் இரண்டு டிராக்டர்களுடன் தப்பிச் சென்றனர். பின்னர் ஜேசிபி இயந்தியரத்தை இயக்கியவர் அலுவலர்களை கண்டதும் ஜேசிபி இயந்திரத்தை வேகமாக இயக்கினார்.

சினிமா பாணியில் துரத்தி பிடித்த வருவாய்த்துறை

சினிமா பட பாணியில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை விரட்டி சென்ற வருவாய் துறையினர், ஜேசிபி ஓட்டுநரை மடக்கிப் பிடித்து நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஜேசிபி இயந்திரத்தை இயக்கிய லட்சுமன பிரபு கைது செய்யப்பட்ட நிலையில், தப்பி ஓடிய இரண்டு டிராக்டர் ஓட்டுநர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:சீன பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் 2 மணி நேரம் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details