கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். விருதுநகர் அருகே பெரியபேராளி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மல்லிகைப் பூ விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து விருதுநகர், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம். தற்போதைய ஊரடங்கினால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் விளைந்த பூக்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.
கோயில்கள் மூடப்பட்டது, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது போன்ற காரணங்களால் பூக்கள் பறிக்கப்படாமலே செடியிலேயே காயந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயப் பணிகளுக்கு அரசு ஊரடங்கிலிருந்து தளர்வு அறிவித்திருந்தாலும் வேலைக்கு ஆள்கள் கிடைப்பதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் மல்லிகைப் பூ விவசாயிகள்.