தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் காணிக்கையை கையாடல் செய்த 3 பூசாரிகள் பணிநீக்கம் - இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பூசாரிகள்

விருதுநகர்: பக்தர்கள் அளிக்கும் காணிக்கையை கையாடல் செய்த மூன்று பூசாரிகள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Temple
Temple

By

Published : Jun 6, 2020, 11:06 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு சித்திரை, ஆடி, தை மாதங்களில் நடைபெறும் விழாக்களில் மக்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.

தங்கம், வெள்ளி, பித்தளை பொருள்கள், விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், அங்கவஸ்திரம் உள்ளிட்டவை பக்தர்கள் சார்பில் காணிக்கையாக செலுத்தப்படும்.

அதன்படி, பக்தர்கள் காணிக்கை செலுத்திய பொருள்கள் முறையாக கணக்கில்கொண்டு வரப்படுவதில்லை என்ற புகார் எழுந்தது. இதனையடுத்து கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அறநிலையத் துறை உதவி ஆணையர் கருணாகரன் ஆய்வுசெய்து பார்த்தார்.

அப்போது, 2019ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி பதிவான சிசிடிவி காட்சியில், மூன்று பூசாரிகள் காணிக்கைப் பொருள்களை தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளும் காட்சி பதிவாகியிருந்தது.

சிசிடிவி காட்சிகள்

இந்தக் காட்சியின் அடிப்படையில் ராமர், கதிரேசன், அரிராம் ஆகிய மூன்று கோயில் பூசாரிகளையும் கோயில் பூஜை, விழாக்களில் பங்குபெற தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இவர்கள் வேறு ஏதும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனரா என்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளை கோயில் அறங்காவலர் குழுவில் உள்ள பூசாரிகளே கையாடல் செய்த இந்தச் செயலால், அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:உண்டியலுடன் மல்லுக்கட்டிய திருடன்: பணம் இல்லாததால் ஏமாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details