தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் பட்டாசு ஆலைகள் இயங்க மாவட்ட ஆட்சியர் அனுமதி - Permission to operate Virudhunagar Fireworks Plant

விருதுநகர்: பட்டாசு ஆலைகள் வரும் 20ஆம் தேதிக்கு பின் 50 சதவீத ஊழியர்கள் கொண்டு முறையான சமூக இடைவெளியை பின்பற்றி இயங்க மாவட்ட ஆட்சியர் கண்ணன் அனுமதி அளித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் கண்ணன் பேட்டி
மாவட்ட ஆட்சியர் கண்ணன் பேட்டி

By

Published : Apr 16, 2020, 11:11 PM IST

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்மண்டல காவல் தலைவர் சண்முக ராஜேஸ்வரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் கருநாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், "விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 689 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 17 நபர்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர். 129 நபர்களுக்கு தொற்று இல்லை. மீதமுள்ள 445 நபர்களுக்கு பரிசோதனை முடிவு வர வேண்டிய நிலையில் உள்ளது.

மாவட்ட ஆட்சியர் கண்ணன் பேட்டி

மேலும், 3,295 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதில் 3,086 நபர்கள் 28 நாள்கள் முழுமை அடைந்தவர்கள். 4,831 நபர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் விருதுநகர் மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய தேவைகளை வழங்கி தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

மாவட்டத்தில் ஊரக பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் வரும் 20ஆம் தேதிக்கு பின் இயங்கலாம், முறையான சமூக இடைவெளியை ஆலைகள் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு - வாழ்வாதாரமின்றி வாடும் வெள்ளரிக்காய் விவசாயிகள்

ABOUT THE AUTHOR

...view details