தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்வதேச அளவிலான சதுரங்க போட்டி தொடங்கியது - VIRUTHUNAGAR

விருதுநகர்: தளவாய்புரத்தில் நடைபெற்று வரும் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

CHESS COMPETITION STARTS

By

Published : Aug 2, 2019, 1:53 AM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் தனியார் தொண்டு நிறுவனத்துடன், தனியார் பள்ளி இணைந்து நடத்தும் சர்வதேச அளவிலான தரவரிசை சதுரங்க போட்டிகள் நேற்று தொடங்கின.

சர்வதேச அளவிலான சதுரங்க போட்டி தொடக்கம்
இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இப்போட்டிகள் ஆகஸ்ட் 4 வரை நடைபெறும் எனவும், வெற்றி பெறும் வீரர்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details