தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்தில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிய இருவர் கைது - தனியார் பேருந்தில் பெரியவர்கள் கைது

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருந்தில் திருட்டு
பேருந்தில் திருட்டு

By

Published : Aug 14, 2020, 3:16 PM IST

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார், அரசுப் பேருந்துகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பேருந்து நிறுத்தம் இடத்தில் மூன்று பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு பேருந்தில் இருந்து இரண்டு எல்இடி டிவிகள், ஆடியோ சிஸ்டம், ஸ்பீக்கர் உள்ளிட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை ஜூலை மாதம் 15ஆம் தேதி இரவில் திருடிவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர், இந்த திருட்டுச் சம்பவம் குறித்து தனியார் பேருந்து உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இடையன்குளம் பகுதியைச் சேர்ந்த முத்து, மகேந்திரன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details