தமிழ்நாடு

tamil nadu

நீரில் மிதந்தபடி யோகாசனம் செய்து ஆச்சரியப்படுத்திய சிறுமி!

By

Published : Sep 24, 2019, 3:32 PM IST

விருதுநகர்: நீரில் மிதந்தபடி 37 வகை ஆசனங்களைச் செய்து கே.நவநீதாஸ்ரீ என்ற மூன்றாம் வகுப்பு சிறுமி இந்தியன் புக் ஆப் ரெக்கர்ட்ஸ் சாதனை படைத்துள்ளார்.

indian book of records created by 3th std school girl

வி௫துநகரைச் சேர்ந்த 3ஆம் வகுப்பு சிறுமி கே.நவநீதாஸ்ரீ (8) . இவர் சிறுவயது முதலே யோகாசனம் செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளார். யோகாசனத்தில் சாதனை புரிய முயற்சி மேற்கொண்டு வந்த இவர், இதற்காக நீ௫க்கு மேல் மிதந்தபடி பல்வேறு ஆசனங்களை செய்து விடாமுயற்சியுடன் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் இன்று தனியார் நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்தபடி 5 நிமிடம் 56 வினாடிகளில் திரிவிக்ரம ஆசனம், கூர்மாசனம் போன்ற 37 வகையான ஆசனங்களை தொடர்ந்து செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்துள்ளார்.

நீரில் மிதந்தபடி 37 வகை ஆசனம் செய்யும் கே.நவநீதாஸ்ரீ

இதையும் படிங்க: யோகாவில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவி!

ABOUT THE AUTHOR

...view details