தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு மற்றும் எண்ணெய் விலை அதிகரிப்பு! - பாமாயில்

விருதுநகர் சந்தையில் பருப்பு மற்றும் எண்ணெய் மார்க்கெட்டில் விலை அதிகரித்து காணப்படுகிறது.

விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு மற்றும் எண்ணெய் விலை அதிகரிப்பு
விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு மற்றும் எண்ணெய் விலை அதிகரிப்பு

By

Published : Nov 8, 2022, 10:33 PM IST

விருதுநகர் மார்க்கெட்டில் கடந்த வாரத்தைவிட பாமாயில் ரூ.90 அதிகரித்து 15 கிலோ டின் ரூ.1750க்கும், துவரம் பருப்பு 100 கிலோ மூட்டை ரூ.100 குறைந்து 10,100க்கும் விற்பனையானது. கடலை எண்ணெய் மாற்றமின்றி (15 கிலோ டின்) ரூ.2950, சன்பிளவர் எண்ணெய் ரூ.3300, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.4500க்கும், நல்லெண்ணெய் ரூ.5280க்கும் விற்பனையானது.

தான்சானியாவில் இருந்து இறக்குமதியாகும் கொண்டைக்கடலை ரூ.25 அதிகரித்து ரூ. 4775க்கு விற்கப்படுகிறது.
55 கிலோ பொறிகடலை மாற்றமின்றி ரூ.3900க்கு விற்கப்படுகிறது. 100 கிலோ சர்க்கரை ரூ.1900, கொண்டக்கடலை ரூ.50அதிகரித்து ரூ.5200க்கு விற்கப்படுகிறது.90 கிலோ மைதா பை ரூ.40 அதிகரித்து ரூ.4280 விற்பனையானது.

100 கிலோ துவரம் பருப்பு புதுசு ரூ.100 குறைந்து ரூ.10,100க்கும், நயம் புதுசு லயன் ரூ.200 குறைந்து ரூ.11,200; நாட்டு உளுந்து ரூ.6800, உளுந்து லயன் ரூ.7200, பாசிப்பயிறு (நாடு) ரூ.6900, பாசிப்பயிறு இந்தியா பருவட்டு ரூ.200 அதிகரித்து ரூ.9200க்கு விற்பனையானது.

மசூர் பருப்பு பருவட்டு ரூ.200 அதிகரித்து ரூ.10,200; உருட்டு உளுந்து நாடு வகை ரூ.11,000, பர்மா வகை ரூ.8800, தொலி உளுந்தம் பருப்பு நாடு வகை ரூ.9500, பாசிப்பருப்பு ரூ.200 அதிகரித்து ரூ.9200 ஆக உள்ளது.

பட்டாணி பருப்பு விலையில் மாற்றமின்றி ரூ.6150, வெள்ளை பட்டாணி ரூ.6700க்கும் விற்கப்படுகிறது. ஆந்திரா ஏ.சி., வத்தல் குவிண்டாலுக்கு ரூ. 1000 அதிகரித்து ரூ.30,000 வரை விற்பனையாகிறது. மல்லி நாடு உருட்டு 40 கிலோ விலையில் மாற்றமின்றி ரூ.6000 முதல் 6500க்கு விற்கப்படுகிறது. திருநெல்வேலி பூஸ்ட் ரக வத்தல் வரத்து இல்லை.

இதையும் படிங்க: வனப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு நிபந்தனை - நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details