விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு தேர்வுநிலை பேரூராட்சி 20 வார்டுகளை கொண்டது. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் 2019-2020 ஆம் ஆண்டிற்கான பேரூராட்சிக்கு கட்ட வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, தொழில் கடை உரிமை கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் விரைவாக கட்ட வேண்டும் என்று பொது மக்களிடம் எடுத்துரைக்க பேரூராட்சி சார்பில் குப்பை அள்ளும் வண்டியில் குழாய் கட்டி வீதி வீதியாக பரப்புரை செய்யப்பட்டது.
வரி செலுத்த வலியுறுத்தி குப்பை வண்டியில் பரப்புரை - வரி கட்ட வலியுறுத்தி குப்பை வண்டியில் பரப்புரை
விருதுநகர்: பேரூராட்சிக்கு வரி கட்டுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த குப்பை வண்டியில் பரப்புரை செய்யப்பட்டது.
வரி கட்ட வலியுறுத்தி குப்பை வண்டியில் பரப்புரை!
குப்பை வண்டியில் வீதி வீதியாகப் பரப்புரை செய்தது பொது மக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதாக ஐபிஎஸ் மனைவி மீது புகார்