விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அரங்கில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் கண்ணன் முன்னிலையில் மாநில சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் போன்ற நகர்ப்புறங்களில் நோய்தொற்று வேகம் அதிகமாக உள்ளது.
உலக சுகாதார நிறுவனம், அறிவியல் வல்லுநர்கள் கூறியுள்ளபடி நிலையான மருந்து, தடுப்பூசி இல்லாத நிலையில் முகக்கவசம் மட்டுமே நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க அடிப்படையான ஒன்று. பொதுமக்கள் முகக்கவசங்களை முழுமையாக பயன்படுத்தாமல் இருப்பதாலும் நோய்த்தொற்று வேகமாக பரவிவருகிறது.
மேலும் தமிழ்நாட்டில் 92 ஆயிரம் மாதிரிகள் இரத்த பரிசோதனை எடுக்கும் திறன் உள்ளது. அதில் 80 சதவீதம் முழுமையான பரிசோதனை முடிவுகளை பெற முடிகிறது.