கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கான காய்கறி, பலசரக்குக் கடைகளுக்கு மட்டுமே விதிவிலக்கு அளித்து குறிப்பிட்ட நேரம் மட்டும் திறக்க அனுமதி அளிப்பட்டுள்ளது.
இதனையடுத்து, டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் ஆங்காங்கே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக தகவல் வருகின்றன. இதுகுறித்து காவல்துறையினர் சோதனையிட்டு, ஒரு சில இடங்களில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி அரசு மதுபானக்கடையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்துவதாக வந்த தகவலையடுத்து, வெம்பக்கோட்டை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தாயில்பட்டி அருகே மடத்துப்பட்டியில் சந்தேகத்துக்கு இடமாக வந்தக் காரை மறித்து, காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தக் காரில் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 750 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அந்தக் காரில் வந்த 3 பேரை கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தாயில்பட்டி அரசு மதுபானக்கடையில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் மாணிக்கராஜா என்பவர் மது பாட்டில்களை காரில் கடத்தி சென்றது தெரியவந்ததது.
அரசு ஊழியர்கள் 3 பேர் கைது! அரசு மதுபானக் கடையின் மதுபாட்டில்களை கடத்த உதவிய மாணிக்க ராஜாவின் நண்பர்களான கார் டிரைவர் தங்கப்பாண்டி, பார் சூப்பர்வைசர் மகேஸ் ஆகியோரையும் வெம்பக்கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 750 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் பயன்படுத்தியக் காரையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க...ஊரடங்கு உத்தரவு: இந்த பொன்னான வாய்ப்பை முறையாக பயன்படுத்துங்கள் - ஏடிஜிபி