விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ. 5 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளை 1200 பயனாளிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், 'காங்கிரஸ் தலைவர்கள், நேஷனல் வங்கியில் உள்ள பணத்தை எல்லாம் கொள்ளை அடித்ததைப் பார்த்துகொண்டு பிரதமர் மோடி சும்மா இருக்கமாட்டார். ப.சிதம்பரம் நியாயமானவர் என்றால் எதற்காகப் பயப்பட வேண்டும். 'அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்' என்றார்.
"இம்ரான்கான் ஒரு சுண்டைக்காய் பையன்" - வறுத்தெடுத்த ராஜேந்திர பாலாஜி! - இம்ரான் நாய்
விருதுநகர்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை 'இம்ரான் நாய்' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், "சட்டம் தன் கடமையைச் செய்து வருகிறது. இதில் ப.சிதம்பரம் என்றால் என்ன? பாமர மக்கள் என்றால் என்ன? அனைவரும் ஒன்றுதான். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் என்ன பேசுகிறாரோ அதைத்தான் ஸ்டாலின் பேசுகிறார். 'இம்ரான்' நமது பிரதமர் மோடியைப் பார்த்து எச்சரிக்கை விடுக்கிறார். நம் நாட்டின் 125 கோடி மக்களின் தலைவர் பிரதமர். அவரைப் பார்த்து சுண்டைக்காய் பாகிஸ்தான் பிரதமர் மிரட்டுகின்ற தொனியில் பேசுகிறார். அதை கைதட்டி ஆரவாரம் செய்கிற திமுக - காங்கிரஸ் உளவாளி கூட்டத்தை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்" என்றார்.
இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை நாய் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமையில் திட்டி பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.