தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தூரில் கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு நீதிமன்றக் காவல்! - திருமணத்தை தாண்டிய உறவு

விருதுநகர்: திருமணத்தைத் தாண்டிய உறவால் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

sattur criminal court
sattur criminal court

By

Published : May 21, 2020, 11:53 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் சேதுராஜ்(25). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரி(22) என்பவருக்கும் திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்துள்ளது. அதனால் முனீஸ்வரியின் கணவர் வீரபாண்டி, அவரது நண்பர்களான மருதுபாண்டி, அலெக்ஸ்பாண்டி, முனியராஜ் ஆகியோர் மது அருவிட்டு சேதுராஜ் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர், தகராறு முற்றவே இவர்கள் நான்கு பேரும் சேதுராஜ், அவரது தந்தை சீனிவாசன் இருவரையும் அரிவாளால் வெட்டினர். அதில், தந்தை சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சேதுராஜ், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தகவலறிந்த காவல்துறையினர், வீரபாண்டி(24), மருதுபாண்டி(24), அலெக்ஸ் பாண்டி(27), முனியராஜ்(25) மற்றும் கார்த்தி(22) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அதையடுத்து, காவல்துறையினர் தற்போது அவர்கள் அனைவரையும் சாத்தூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவால் இளைஞர் வெட்டிக் கொலை: பெண் கைது

ABOUT THE AUTHOR

...view details