தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரண்டாவது தலைநகராக மதுரை வந்தால் மிக்க மகிழ்ச்சி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - Madurai is the capital

விருதுநகர்: தென் பகுதியில் இரண்டாவது தலைநகராக மதுரை அமைந்தால் தென்மாவட்ட பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

madurai
madurai

By

Published : Aug 20, 2020, 2:38 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மதுரை மாநகர் இரண்டாவது தலைநகராக அமைந்தால் தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இது தென்மாவட்ட மக்களுக்கும் மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சி. அதிமுக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து தெளிந்த நீரோடையாக உள்ளது. அந்த நீரோடையில் யாரும் கலங்கம் கற்பிக்க முடியாது" என்றார்.

மதுரை தலைநகராக வந்தால் மகிழ்ச்சி

பாஜகவின் பின்னால் அதிமுக இயங்குகிறதா என்ற கேள்விக்கு, மத்திய அரசுக்கு பின்னால் தான் மாநில அரசு இயங்குகிறது. தமிழ்நாட்டில் அதிமுகதான் ஆளும், அதை பார்த்து திமுக வாழும் என அமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க:சேலத்தில் ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலி!

ABOUT THE AUTHOR

...view details