தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சோனியா காந்திக்கு பிறப்புச் சான்றிதழ் நான் தருகிறேன்' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர்: இராஜபாளையம் அருகே அறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சோனியா காந்தியை விமர்சித்துப் பேசினார்.

virudhunagar

By

Published : Oct 6, 2019, 11:37 PM IST

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதான திடலில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில்கலந்து கொண்டு பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

"ராகுல் காந்தியை இந்தியர் கிடையாது என கூறியதற்கு காங்கிரஸ் சார்பில் பல கண்டனங்கள் வந்தன. இந்திய நாட்டின் பிரதமராக இரு நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வரக்கூடாது" என்றார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மேலும் பேசிய அவர்,"சோனியா காந்தி இந்தியாவில் பிறந்தவர் என பிறப்புச் சான்றிதழ் தர நீங்கள் தயாரா?, அப்படி இல்லையென்றால் நான் தருகிறேன்" என கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதையும் படிங்க:

ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்புடைய கொலை வழக்கு; மூன்று மாதத்தில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details