தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவாதத்துக்கு நான் தயார், ஆ. ராசா தயாரா? ராஜேந்திர பாலாஜி - ஸ்டாலின்

ரஜினிக்கு சுயசிந்தனை உள்ளது, அதனால் கட்சி ஆரம்பித்துள்ளார். மொத்தத்தில் அனைவரும் சேர்ந்து திமுக -வை கும்மியடிக்க போகிறோம் என பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Rajendra Balaji  debate  A Rasa  ராஜேந்திர பாலாஜி  ராசா  ஸ்டாலின்  திமுக
Rajendra Balaji debate A Rasa ராஜேந்திர பாலாஜி ராசா ஸ்டாலின் திமுக

By

Published : Dec 7, 2020, 3:08 AM IST

விருதுநகர்: விவாதத்துக்கு நான் தயார், ஆ. ராசா தயாரா? எனவும் ராஜேந்திர பாலாஜி கேள்வியெழுப்பியுள்ளார்.

விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கரோனோ பாதித்த நேரத்தில் மக்களை சந்தித்தாரா ஸ்டாலின்? கரோனா காலத்தில் தன்னை வருத்தி ஊர் ஊராக சென்று ஆய்வு கூட்டங்களை நடத்தினார் எடப்பாடி பழனிச்சாமி.

2ஜியில் ஊழல் செய்த பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் திமுகவினர். அதனால் தான் ராசாவை ஸ்டாலின் கூடவே வைத்துள்ளார்.
ஆ.ராசா விவாதத்திற்கு அழைத்தால் எடப்பாடியார் எதற்கு வரவேண்டும், நான் வருகிறேன். திமுக தயாரா? எனக் கேள்வி எழுப்பினார்.
பொறாமையுடன் எப்படியாவது அவதூறு பரப்பி ஆட்சியை கைப்பற்றி விடலாம் என கனவு காணும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள். எடப்பாடியை பற்றி பேச என்ன யோக்கியதை உள்ளது.

இஸ்லாமிய மக்களை ஏமாற்றி ஒட்டு வாங்கும் திமுக சாதிக்பாட்சா மனைவியை மிரட்டுகிறது. எடப்பாடியை பற்றி பேச ஸ்டாலினுக்கோ ஆ.ராசாவிற்கோ தகுதியில்லை. நாங்கள் சொத்து பட்டியலை தற்போதே வெளியிடுவோம்.

ஆ.ராசாவால் சொத்துப்பட்டியலை வெளியிடமுடியுமா? சைக்கிளில் சென்றவர் ஆ.ராசா. தற்போது எப்படி வெளிநாட்டு காரில் செல்கிறார். காங்கிரஸிடம் தான் திமுக அடமானத்தில் உள்ளது.

நாங்கள் பாஜகவிடம் கட்சியை அடமானம் வைக்கவில்லை. பாஜகவினர் செய்யும் நல்ல திட்டங்களை ஆதரிக்கிறோம். விக்கிரபாண்டி மற்றும் நாங்குநேரியில் வெற்றி பெற்றதால் எடப்பாடி அரசுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மக்கள் ஆதரவோடு தான் எடப்பாடி ஆட்சி நடத்துகிறார். பாஜக அமெரிக்காவில் உள்ளதா மக்கள் ஓட்டு போட்டு தான் மோடி பிரதமர் ஆகியுள்ளார். ரஜினிக்கு சுயசிந்தனை உள்ளது. அதனால் கட்சி ஆரம்பித்துள்ளார். மொத்தத்திற்கு அனைவரும் சேர்ந்து திமுகவை கும்மியடிக்க போகிறோம்.
ரஜினி ஜனவரியில் கட்சி ஆரம்பித்து மாவட்டச்செயலாளர்களை நியமிக்கட்டும். அதன் பின் கூட்டணி பற்றி பேசலாம். முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும். தன் உடல்நலனை பற்றி கவலை படாமல் பொதுமக்கள் நலனில் கவனம் செலுத்தும் முதலமைச்சரின் நீண்ட நாள்களுக்கு பிறகு பார்க்கிறேன். ஆனால் திட்ட மிட்டே முதலமைச்சரின் பெயரை கெடுக்க திமுக முயல்கிறது. புயல் பாதிப்பு நிவாரணத்தை மத்திய அரசிடம் இருந்து போராடி பெறுவோம். தமிழ்நாடு தாக்க வந்த புயல் வலுவிழந்து அப்படியே யூடர்ன் போட்டு திரும்பி சென்றது தற்போதுதான்.
நான்கு ஐந்து பேர் மருத்துவம் படித்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த இட ஒதுக்கீட்டினால் தற்போது ஏராளமான ஏழை அரசுபள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தது எடப்பாடிதான். இது தான் அதிசயம், அற்புதம். எடப்பாடியை அவதூறாக பேசும் ஸ்டாலினையும் ஆ.ராசாவையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஸ்டாலின் தமிழனே அல்ல, கைபர் கணவாய் வழியாக தப்பி வந்தவர். விவசாயிகளுக்கு ஒரு பிரச்னை என்றால் முதல் ஆளாக எடப்பாடி குரல் கொடுப்பார். தேர்தல் கூட்டணி என்பது வேறு அரசு நிலைப்பாடு என்பது வேறு. அதில் எடப்பாடி தெளிவாக உள்ளார்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: ’ஸ்டாலின் மக்களை சந்திப்பது சேவைக்கு அல்ல; தேவைக்கு’- ராஜேந்திர பாலாஜி!

ABOUT THE AUTHOR

...view details