தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 21, 2019, 9:21 PM IST

Updated : Dec 21, 2019, 9:33 PM IST

ETV Bharat / state

வரதட்சணை கேட்டு மனைவியை கொன்றவருக்கு பத்தாண்டு சிறை!

விருதுநகா்: வரதட்சணை கேட்டு மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரதட்சணை கேட்டு மனைவியை கொன்ற கணவருக்கு சிறைத் தண்டனை
வரதட்சணை கேட்டு மனைவியை கொன்ற கணவருக்கு சிறைத் தண்டனை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மேலத்தெருவைச் சேர்ந்த தம்பதி சிவலிங்கம்-பாப்பாத்தி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவலிங்கம் மது அருந்திவிட்டு மனைவி பாப்பாத்தியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி அடித்து துன்புறுத்தினார்.

அதேபோல் 2011ஆம் ஆண்டு சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் பாப்பாத்தியை சிவலிங்கம் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொலைசெய்தார். இதில் பலத்த காயமடைந்த பாப்பாத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், இன்று நீதிபதி பரிமளா முன் விசாரணைக்கு வந்தது.

வரதட்சணை கேட்டு மனைவியை கொன்ற கணவருக்கு சிறைத் தண்டனை

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, பாப்பாத்தியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலைசெய்த சிவலிங்கத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டணையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். பின்னர் சிவலிங்கத்தை காவல் துறையினர் பலத்த பாதுகாப்போடு சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: பேராசிரியர் நிர்மலா தேவிக்கு மீண்டும் பிணை வழங்கிய நீதிமன்றம்!

Last Updated : Dec 21, 2019, 9:33 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details