விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சில்லையநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (56). பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்துவருகிறார். இவரது மனைவி ரேவதி(48) குடும்ப சூழ்நிலை காரணமாக 27.09.2018 அன்று மலேசியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்றார். கடந்த 10 மாதங்களாக அங்கே தங்கியிருந்து வேலை பார்த்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேவதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறந்து போன மனைவியின் உடலை கேட்கும் கணவர் - request wife body
விருதுநகர்: மலேசியாவில் இறந்து போன தன்னுடைய மனைவியின் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர வேண்டும் என உயிரிழந்த பெண்ணின் கணவர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ரேவதி உயிரிழந்த தகவல் மலேசியாவில் உள்ள ஏஜெண்ட் ஜான் என்பவர் மூலம் கணவர் கணேசனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வறுமையில் வாடும் கணேசனால் மலேசியாவில் இறந்த மனைவியின் உடலை பார்க்க செல்ல முடியாத நிலையில் உள்ளார். எனவே இறந்து போன தனது மனைவியை பார்க்க வேண்டும், ஈமக் காரியம் செய்து நல்லடக்கம் செய்ய வேண்டும், எனவே தமிழ்நாடு அரசு எனது மனைவியின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர உதவி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.