சேலம் அருகே மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் காளிமுத்து, அவரது மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எம்பிகே.புதுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காளிமுத்து, தனது மனைவி ராஜம்மாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றவே காளிமுத்து, தனது மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார்.