விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகரில் வசித்து வருபவர் சங்கரநாராயணன். இவர் மகள் முனீஸ்வரி. இவர் வெம்பக்கோட்டை அருகே கட்டணச்செவல் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் என்பவரை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.
ராம்குமார் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தம்பதியினர் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், முனீஸ்வரி சில நாட்களுக்கு முன்பு ராம்குமாருக்கு விவகாரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கோபமடைந்த ராம்குமார், நேற்று (ஜூன். 22) இரவுசாத்தூர் அண்ணாநகரில் உள்ள அவரது மாமனார் வீட்டில் சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையை அருகில் இருந்த முனீஸ்வரியின் சித்தி மாரியம்மாள் (55) விலக்கியுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த கணவன் அருகிலிருந்த கத்தியால் மாரியம்மாளை குத்தியுள்ளார்.