தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடன் தொல்லையால் கணவன்,மனைவி தற்கொலை! - virudhunagr news

விருதுநகர்: ராஜபாளையம் அருகே கடன் தொல்லையால் கணவன்,மனைவி இருவரும் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

money issue
money issue

By

Published : Mar 21, 2020, 9:51 PM IST

விருதுநகரில் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஐந்து கடை பஜார் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் - ஜோதி தம்பதியினர். இவர்களுக்கு 11 ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். ராஜ்குமார் சாயப்பட்டறையில் கூலி தொழிலாளியாக பணியாற்றினார்.

அவருக்கு கடன் தொல்லை இருந்துள்ளதால் குடும்பமே சோகத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மகள் வெளியே சென்ற நேரத்தில், கணவன்-மனைவி இருவரும் ரசாயனம் கலந்த மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.

இந்தத் தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், சேத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இந்தத் தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரையும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலை!

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். கடன் தொல்லையால் கணவன்-மனைவி இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேத்தூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனா வைரஸ் : தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் என்ன? ஸ்டாலின் சரமாரி கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details