தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாணிப்பாறை வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு? - தாணிப்பாறை சாமியார் மண்டை ஓடு

விருதுநகர்: தாணிப்பாறை வனப்பகுதிக்குள் மனித எலும்புக்கூடு இருப்பது வனத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

human skull founded in thaaniparai forest

By

Published : Sep 20, 2019, 9:24 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாணிப்பாறை வனப்பகுதிக்குள் மனித எலும்புக்கூடுகள் கிடப்பதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத் துறை, காவல் துறையினர் பாலமலை என்ற வனப்பகுதிக்குள் கிடந்த மனித மண்டை ஓடு, எலும்புகள், காவி உடை, ருத்ராட்சை மாலை, கைத்தடி உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அவற்றை எடுத்துச் சென்றனர்.

வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு

காவி உடை, ருத்ராட்சை போன்றவற்றை வைத்து பார்க்கும்போது சாமியார் ஒருவரின் மண்டை ஓடு என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இது குறித்து சாப்டூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வனப்பகுதிக்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details