விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கேஸ் ஏஜென்ஸி நடத்தி வருபவர் கண்ணன். இவருடைய ஏஜென்ஸிக்கு சொந்தமான கேஸ் குடோன் அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் மதுரை - தூத்துக்குடி பிரதான சாலையில் உள்ளது.
இந்நிலையில், இன்று (அக்.12) வழக்கம் போல் தன்னுடைய கேஸ் குடோனுக்கு சென்ற கண்ணன் குடோனின் பூட்டு உடைக்கப்பட்டிருப்தை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த 116 சிலிண்டர்களில் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள 10 கமர்ஷியல் சிலிண்டர்கள் திருடு போய் இருப்பது தெரிய வந்தது.
இந்தத் திருட்டு சம்பவம் குறித்து கண்ணன் உடனடியாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
குடோன் பூட்டை உடைத்து 10 எரிவாயு சிலிண்டர்கள் திருட்டு! - கேஸ் குடோனில் இருந்து சிலிண்டர்கள் திருட்டு
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் தனியார் கேஸ் ஏஜென்ஸிக்கு சொந்தமான கேஸ் குடோன் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்புடைய எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளன.
![குடோன் பூட்டை உடைத்து 10 எரிவாயு சிலிண்டர்கள் திருட்டு! cylinder](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:47:50:1602494270-tn-vnr-02-gas-cylinder-theft-vis-script-7204885-12102020071906-1210f-1602467346-29.jpg)
cylinder
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தடயங்களை சேகரித்து கேஸ் சிலிண்டர்களை திருடிச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் திருட்டு!