விருதுநகரில் நமது ஊர் நமது கடமை என்ற அமைப்பிலிருந்து 25 பள்ளிகளைச் சேர்ந்த நான்காயிரத்து 360 மாணவ மாணவிகள் கலந்துகொண்ட குப்பைகளைத் தரம் பிரிப்பது எப்படி என்ற மாபெரும் விழிப்புணர்வு வகுப்பு ஒரு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது.
குப்பைகளைத் தரம் பிரிப்பது குறித்த பாட நிகழ்ச்சி: 4000 மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை! - குப்பைகளை தரம் பிரிப்பது எப்படி
விருதுநகர்: நமது ஊர் நமது கடமை என்ற அமைப்பிலிருந்து பள்ளி மாணவிகள் பங்குபெற்ற குப்பைகளைத் தரம் பிரிப்பது குறித்த வகுப்பு நடைபெற்றது.
![குப்பைகளைத் தரம் பிரிப்பது குறித்த பாட நிகழ்ச்சி: 4000 மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை! How to grade garbage, an achievement program attended by 4360 students, குப்பைகளை தரம் பிரிப்பது எப்படி, 4360 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சாதனை நிகழ்ச்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5916745-thumbnail-3x2-garbage-program.jpg)
4360 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சாதனை நிகழ்ச்சி
இச்சாதனை, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பிலிருந்து அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு முன் 4000 பேர் கலந்துகொண்டது மட்டுமே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.
4360 மாணவ மாணவிகள் கலந்துகொண்ட சாதனை நிகழ்ச்சி
இதற்கான சான்றிதழை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் ஹரிஷ், நமது ஊர் நமது கடமை அமைப்பினர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் 4360 பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.