தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வத்திராயிருப்புப் பகுதியில் முதல் கரோனா பாதிப்பு - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர்: வத்திராயிருப்பு தாலுகாவில் முதன்முதலாக நெடுஞ்சாலைத் துறை ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Corona cases in virudunagar district
வத்திராயிருப்பு பகுதியில் முதல் கரோனா பாதிப்பு

By

Published : Jun 15, 2020, 9:22 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் இதுவரை யாருக்கும் கரோனா தொற்று பரவாமல் இருந்தது.

இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

முதல் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால் அப்பகுதி முழுவதும் சுகாதாரத் துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details