விருதுநகர்: சுதந்திர காற்றைச் சுவாசிக்க முகக்கவசங்கள் தடையென நினைப்பவர்களுக்கும் தொழில்நுட்பங்களின் மீது அலாதி பிரியம் கொண்டவர்களுக்கும் புதுமையான முறையில் முகக்கவசங்களைத் தயார் செய்கிறார், நாகராஜ்.
இரண்டு மடிப்பாக தைக்கப்பட்ட முகக்கவசத்தின் நடுவில், ஐந்து கிராம் அளவில் வெட்டிவேர் நிரப்பி, இவர் தயாரிக்கும் மூலிகை முகக்கவசம், மக்களிடையே ஏற்கெனவே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. தற்போது அந்த முகக்கவசத்தில் புதிய முயற்சியாகத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ப்ளூடூத் இணைத்து சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ், நீண்ட நேரம் முகக்கவசம் அணிபவர்களின் சிரமத்தைச் சிக்கலில்லாமல் நீக்க முடிவுசெய்தார். அதன் விளைவாக உருவானதுதான் வெட்டிவேர் முகக்கவசம். அதில் கூடுதல் இணைப்பாக தொழில் நுட்ப பிரியர்களையும், இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் ப்ளூடூத் முகக்கவசம் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். இந்த முகக்கவசங்களுக்கு இளைஞர்கள் மட்டுமின்றி, அரசு அலுவலர்கள் தொடங்கி காவல் துறையினர் வரை அனைவரும் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
"தற்சார்பு வாய்ச்சொல் அல்ல வாழ்க்கை" - அசத்தும் 'மா' சாகுபடி விவசாயி!
இதுகுறித்து நாகராஜ் கூறுகையில், “சிலருக்கு முகக்கவசம் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. ஆனால், கரோனா நெருக்கடியில் முகக்கவசத்தை அணிவதைத் தவிர்க்கவும் முடியாது. அதைக் கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்டதுதான் மூலிகை முகக்கவசம். இதற்காக வெட்டிவேரைப் பயன்படுத்தி வருகிறேன்.