தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் வெளுத்து வாங்கிய மழை - Rain in Virudhunagar

விருதுநகர்: நீண்ட நாள்களுக்குப் பின் பரவலான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Heavy Rain in Virudhunagar
Heavy Rain in Virudhunagar

By

Published : Mar 11, 2021, 12:33 PM IST

கந்தக பூமியாம் விருதுநகரில் நீண்ட நாள்களுக்கு பின் நேற்று (மார்ச்10) பரவலான மழை பெய்தது. கடந்த ஜனவரி மாதத்தில் பெய்த தொடர் மழையினால், மாவட்டத்தில் பல்வேறு விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது.

விருதுநகரில் பரவலான மழை

தொடர்ந்து கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. வெப்பத்தை தாங்க முடியாமல் வன உயிரினங்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின. இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவில் சாரல் மழை பெய்யத் தொடங்கி கனமழையாக உருவெடுத்தது. மழையால் பூமி மட்டுமல்ல, மக்கள் மனமும் குளிர்ந்துள்ளது.

இதையும் படிங்க:வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத அமைச்சர் நிலோபர் கபில் : தொண்டர்கள் கொந்தளிப்பு!

ABOUT THE AUTHOR

...view details