விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளான பந்தல்குடி, கொப்புசித்தம்பட்டி, மறவர் பெருங்குடி , கானாவிளக்கு உள்ளிட்டப் பகுதிகளில் விடிய விடிய கொட்டிய மழையால் விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழையால் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, நவம்பர் 4, 5ஆம் தேதியில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று(நவ .4) காலை முதலே கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் இரவு நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து விடிய விடிய கன மழையை கொட்டித்தீர்த்தது.