தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவதூறு வழக்கில் ஹெச். ராஜாவுக்கு பிடிவாரண்ட்! - Srivilliputhur

இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹெ. ராஜா
ஹெ. ராஜா

By

Published : Oct 7, 2021, 6:35 PM IST

விருதுநகர்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் செப்டம்பர் 20ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பங்கேற்றார்.

அப்போது, அவர் பேசும்போது, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், அவர்களது வீட்டிலுள்ள பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதாக விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:கேள்வி கேட்டார் வருண் காந்தி - கழற்றிவிட்டது பாஜக

ABOUT THE AUTHOR

...view details