தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் - குண்டர் சட்டம்

விருதுநகரில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

gundas Act  Illegal crackers Manufacturers  gundas Act Action will take Against Illegal crackers Manufacturers  virudhunagar news  virudhunagar latest news  குண்டர் தடுப்பு சட்டம்  virudhunagar district collector  விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  விருதுநகரில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம்  விருதுநகர் செய்திகள்  சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம்  குண்டர் சட்டம்  ஆட்சியர் அதிரடி
ஆட்சியர் அதிரடி

By

Published : Jul 7, 2021, 9:57 PM IST

விருதுநகர்: சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் தொடர் வெடி விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் தொடர் வெடி விபத்துகளை தடுக்கும் நோக்கிலும், மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆய்வு செய்யும் பொருட்டும், சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு உற்பத்தி செய்வதை தடுக்கும் நோக்கிலும் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்கும் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் அலுவலர்கள் அடங்கிய 5 சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.

ஐந்து சிறப்பு குழுவானது திங்கள் முதல் சனி வரை நியமனம் செய்யப்பட்டுள்ளது:

5 சிறப்புக்குழுவானது தொடர்ந்து வாரம் தோறும் மாற்றி அமைக்கப்பட்டு தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வரும். மேலும், இந்த குழுக்கள் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய வட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்யும்.

ஐந்து சிறப்பு ஆய்வுக் குழுக்களும் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வட்டங்களில் உள்ள கிராமங்களில் சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் இடங்களை ஆய்வு செய்யும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தினர் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் தொடர்ச்சியாக சட்ட விரோதமாக வெடி செய்யும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் வெடிபொருள் சட்டம், விதிகளை பின்பற்றி உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்றும், தவறும் தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுப்பதுடன் தொழிற்சாலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

சட்ட விரோத பட்டாசு உற்பத்தி செய்யும் நபர்கள் மற்றும் விதிமீறல்களில் ஈடுபடும் பட்டாசு தொழிற்சாலைகள் மீது புகார் அளிக்க தனி வட்டாட்சியர் (தீப்பட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகள் ஆய்வு) -ஐ அலைப்பேசி எண்: 9342694959 -ல் தொடர்பு கொள்ளலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆலோசனை கூட்டத்தில் பேசியதை அதிகாரப்பூர்வ கருத்தாக எடுத்துக் கொள்ளகூடாது - ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details