விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நேற்றிரவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்று நிற்காமல் சென்றதைத் தொடர்ந்து,அந்த வாகனத்தை காவல் துறையினர் துரத்திச் சென்றனர்.
ஆட்சியரகம் அருகே துப்பாக்கி பறிமுதல்! 3 பேருக்கு வலைவீச்சு! - Gen recovered
விருதுநகர்: ஆட்சியர் அலுவலகம் அருகே சொகுசுக் காரில் அடையாளம் தெரியாத நபர்கள் கைத்துப்பாக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு காரும், துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், காரிலிருந்து தப்பியோடிய நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
அப்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காரை காவல் துறையினர்மடக்கி பிடித்தபோது, கார்ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேர் தப்பி ஓடினர். இதையடுத்துகாரை சோதனை செய்ததில் காருக்குள்கைத்துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. பின்னர் அதை பறிமுதல் செய்து, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து சூலக்கரை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், கேரளா பதிவெண் கொண்ட காரை கர்நாடக பதிவெண்ணாக மாற்றி, போலிப் பதிவு எண் வைத்து ஏன் வந்தார்கள் என்றும், மேலும், அந்த நபர்கள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் தீவிர விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.