தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கு ஏன் இல்லை?' - பட்டதாரி இளைஞர்கள்! - இட ஒதுக்கீடு

விருதுநகர்: மத்திய, மாநில அரசுகளில் வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஏன் வழங்குவது இல்லை என்பது குறித்தும் 90 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்தும் பட்டதாரி இளைஞர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பட்டதாரி மாணவர்கள் வழங்கவிருக்கும் கோரிக்கை மனு

By

Published : Sep 26, 2019, 7:50 AM IST

விருதுநகர் மாவட்ட பட்டதாரி இளைஞர்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், சமீபத்தில் மத்திய அரசின் ரயில்வே துறை சார்பாக நடந்து முடிந்த தேர்வில் தமிழ்நாட்டின் தெற்கு கோட்டத்தில் அதிகப்படியான வடமாநில இளைஞர்கள் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

பட்டதாரி மாணவர்கள் வழங்கவிருக்கும் கோரிக்கை மனு

இதன்காரணமாக தமிழ்நாட்டில் இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பினை பறிகொடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழ்நாட்டு இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மிகுந்த அளவில் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஏன் வழங்குவது இல்லை என்பது குறித்தும் 90 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழர்களுக்கு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க : ரயில்வே பாலத்தில் தேங்கும் மழைநீர்... மக்கள் சாலை மறியல்!

ABOUT THE AUTHOR

...view details