விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மெட்டுகுண்டு ஊராட்சியில் மொத்தம் ஒன்பது வார்டுகள் உள்ளன. இதில் 9ஆவது வார்டில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட மாரிமுத்து என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இதற்கான சான்றிதழைக் கடந்த மாதம் 2ஆம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலரே மாரிமுத்துவிடம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி கடந்த மாதம் 11ஆம் தேதியன்று பதவியேற்க ஊராட்சி அலுவலகம் வந்திருந்த மாரிமுத்துவை தேர்தல் அலுவலர்கள் பதவியேற்க விடாமல் தடுத்துள்ளனர். இதையடுத்து இன்று வரை அந்த வார்டு உறுப்பினர் பதவியை ஏற்கவிடாமல் அலைக்கழித்து வந்துள்ளனர். இதனால் நம்பிக்கையிழந்த மாரிமுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், “9ஆவது வார்டில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட மாரிமுத்து நான் அதற்கான ஆவணங்களை கைவசம் வைத்திருக்கிறேன். நான் என்னுடைய பதவியை ஏற்க தடையாக அதிமுகவினர் இருக்கிறார்கள். எனது உயிருக்கு அவர்களால் ஆபத்து உள்ளது.