கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், உலகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஆனால், மக்கள் சிலர் கரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வின்றி சாலைகளில் நடமாடி வருகின்றனர்.
கிருமிநாசினி தெளித்து துரத்திய ஊழியர்கள் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, விருதுநகர் மாவட்டடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றிய பொதுமக்கள் மீது நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து துரத்தியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சிலர் நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்