விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சார்ந்த சுமார் 900 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இடிந்து விழும் நிலையில் அரசு மேல்நிலை பள்ளி கட்டிடம்! - srivilliputhur
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கூமாபட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆய்வக கட்டிடத்தை சீரமைக்கமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த பள்ளியில் உள்ள ஆய்வக கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து மோசமான நிலையில் உள்ளது. எந்த சமயத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த ஆய்வக கட்டிடத்திற்குள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்துடனேயே உள்ளே செல்ல வேண்டிய நிலையுள்ளது. ஆனால் பள்ளி நிா்வாகம் இந்த விசயத்தில் அலட்சிய போக்காகவே இருந்து வருகிறது.
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து சில நாட்களாகியும் பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இந்த ஆய்வக கட்டிடத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.