தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அம்மா எதிர்த்த கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசு ஆர்வம்' - கி. வீரமணி குற்றச்சாட்டு - விருதுநகர் மாவட்டச் செய்திகள்

விருதுநகர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி செய்வதாகக் கூறி ஆட்சி அவர் எதிர்த்த கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசு ஆர்வம் காட்டுவதாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

k-veeramani
k-veeramani

By

Published : Jan 22, 2020, 7:35 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நீட் எதிர்ப்பு பிரசார கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதன் தலைவர் கி. வீரமணி நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை ஆகியவைக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைக் கூறினார்.

கி. வீரமணி பேசிய போது

அவர் கூறுகையில், ”நீட் தேர்வில் மாநில பாடத்திட்டம் சார்ந்த கேள்விகளைவிட சிபிஎஸ்சி கேள்விகள்தான் அதிகமாக உள்ளன. இத்தேர்வு திட்டமிட்டு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் நடைமுறைச் சிக்கல் அதிகரிக்கும். தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சிதான் நடைபெறுகிறது எனக் கூறிவிட்டு, அம்மா எதிர்த்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு மிகுந்த ஆர்வம் காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘பொதுத்தேர்வுகளின் மூலம் நம் குழந்தைகளின் கண்கள் குத்தப்படுகிறது’ - கி.வீரமணி...

ABOUT THE AUTHOR

...view details