தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்' - விருதுநகர் எஸ்பி மனோகர் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எஸ்பி மனோகர்
எஸ்பி மனோகர்

By

Published : Apr 1, 2022, 6:48 AM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சேகரன் (52). இவர் அந்த பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் தாய் அருப்புக்கோட்டை மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குண்டாஸ் நடவடிக்கை: இந்த நிலையில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் பரிந்துரையின் பேரில், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த சேகரன் மீது (மார்ச் 30) நேற்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார். மேலும் இதுபோன்று விருதுநகர் மாவட்டத்தில் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விருதுநகர் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: விருதுநகர் பாலியல் வழக்கு: 'விரைந்து தண்டனை பெற்றுத் தருவோம்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details