தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பைகளை அள்ள நவீன பேட்டரி வாகனங்கள் சாத்தூரில் அறிமுகம்! - குப்பைகளை அள்ள பேட்டரி வாகனங்கள் சாத்தூரில் அறிமுகம்

விருதுநகர்: 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் சாத்தூர் நகராட்சிக்கு வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்களின் முதல் ஓட்டத்தைச் சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

பேட்டரி வாகனங்கள்

By

Published : Nov 12, 2019, 8:17 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள சிவன் கோயில் தெப்பக்குளத்திற்கு ரூ. மூன்று கோடி செலவில் மழை நீர் செல்லக்கூடிய குழாய் பதிக்கும் பணிகளை அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன், தொடங்கி வைத்துள்ளார்.

அதேபோல் ஏழாயிரம் பண்ணை - சல்வார்பட்டியில் தலா ரூ. 20 லட்சம் மதிப்புள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கும்; பூமி பூஜை நடைபெற்றது. மேலும் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் சாத்தூர் நகராட்சிக்கு வழங்கப்பட்டு உள்ள பேட்டரி வாகனங்கள், கழிவு நீர் அடைப்பினை சரி செய்யும் வாகனங்களின் முதல் ஓட்டத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

குப்பைகளை அள்ள பேட்டரி வாகனங்கள் சாத்தூரில் அறிமுகம்!

அதைத் தொடர்ந்து 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் ரூ. 45 லட்சம் மதிப்பில் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் இயந்திரத்தின் இயக்கமும் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் படிக்க: பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால்... சுவையான உணவு தந்து அசத்தும் உணவகம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details