தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழைப் பெண்களின் திருமணத் தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா - அமைச்சர் பங்கேற்பு - ஏழைப் பெண்களின் திருமணத் தாளிக்குத் தங்கம் வழங்கும் விழா

விருதுநகர் மாவட்டத்தில் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ. 24 கோடி மதிப்பீட்டில் உதவிகளை 3100 பயனாளிகளுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்.

ஏழைப் பெண்களின் திருமணத் தாளிக்குத் தங்கம் வழங்கும் விழா - அமைச்சர் பங்கேற்பு
ஏழைப் பெண்களின் திருமணத் தாளிக்குத் தங்கம் வழங்கும் விழா - அமைச்சர் பங்கேற்பு

By

Published : Jan 15, 2022, 4:26 PM IST

விருதுநகர்:சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு உள்ளிட்ட வட்டங்களில் தமிழ்நாடு அரசு மூலம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்குத் தாலிக்குத் தங்கம், நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர். ராமச்சந்திரன் கலந்துகொண்டு ஏழைப் பெண்களுக்குத் தாலிக்கு தங்கம், உதவித் தொகையினை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியத்திற்குள்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 3100 பயனாளிகளுக்கு 12 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி உதவியும், 11 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க நாணயங்களும் மொத்தம் சுமார் ரூ.24 கோடி மதிப்பீட்டில் உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ரகுராமன் கோட்டாட்சியர் புஷ்பா, வட்டாட்சியர் வெங்கடேசன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:Army Day: முப்படைத் தளபதிகள் போர் நினைவிடத்தில் மரியாதை

ABOUT THE AUTHOR

...view details