தமிழ்நாடு

tamil nadu

விருதுநகரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம்!

By

Published : Oct 7, 2021, 10:50 PM IST

விருதுநகரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

விருதுநகரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம்
விருதுநகரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம்

விருதுநகர்:விருதுநகர் வியாபாரிகள் சங்கம் சார்பாக கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்த அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக்கோரி முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
விருதுநகரில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி அசோகன் லாரி புக்கிங் நிறுவனம் நடத்தி வரும் பால்பாண்டி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக இருவர் கைது

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த மேற்கு காவல் நிலைய காவல் துறையினர், பால்பாண்டியிடம் பணிபுரிந்த லோடுமேன் இருவரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் மீது விரைவாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, அதிகபட்ச தண்டனை பெற்றுத்தந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக்கோரி, இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக, விருதுநகர் மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பாக, தெப்பக்குளம் உள்ளிட்டப் பகுதிகளில், 700க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு, முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: கனிம வளம் கொள்ளை - சமூக ஆர்வலர்கள் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details