தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கையுந்து பந்து விளையாடி மணமக்களை வரவேற்ற நண்பர்கள் - வாலிபால் ஆட்டத்தோடு வரவேற்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கையுந்து பந்து விளையாடியபடி மணமக்களை வரவேற்கும் நண்பர்களின் காணொலி இணையத்தில் வைரலாகிவருகிறது.

volley ball
volley ball

By

Published : Sep 11, 2020, 11:33 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். கையுந்து பந்து விளையாட்டில் மிகச்சிறந்த ஆட்டக்காரர். இந்நிலையில், இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் மம்சாபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் வீட்டிற்குச் சென்றனர்.

மணமக்களை வரவேற்ற நண்பர்கள்

அப்போது மணமகனின் நண்பர்கள் திருமண வீட்டார் ஆச்சர்யப்படும் அளவிற்கு வீதியின் இருபுறமும் நின்று கையுந்து பந்து விளையாடி வரவேற்றனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் மேளதாளத்துடன் கைத்தட்டி மணமக்களை உற்சாகப்படுத்தினர்.

மணமக்களை கையுந்து பந்து விளையாடி உற்சாக வரவேற்பளிக்கும் காணொலி இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' - மாநகரப் பேருந்துகளில் ஜெ., வாசகம்

ABOUT THE AUTHOR

...view details